ஜூலை மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்


july month rasipalan for simmam, kanni, thulam, viruchigam in tamil
x
தினத்தந்தி 1 July 2025 6:44 AM IST (Updated: 1 July 2025 5:05 PM IST)
t-max-icont-min-icon

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூலை மாத பலன்களை பார்ப்போம்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தவறாதவர் நீங்கள்.நன்றி மறவாமை வேண்டும் என்பது உங்கள் ரத்தத்தில் கலந்த ஒன்று.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரிகளுக்கு

திடீரென்று யோகம் கதவைத் தட்டும் நேரமிது. வேற்று இன மதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் வியாபார நிமித்தமாக அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் தங்கள் சுய தொழில் மூலமாக தங்கள் வட்டாரத்தில் பிரபலமாவீர்கள். நல்ல வருவாயை எதிர்கொள்வீர்கள். கணவர் தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த வங்கி டெபாசிட்களை கொண்டு தங்கள் காலியிடத்தில் வீடு கட்டத் துவங்குவீர்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் நினைத்த துறையை தேர்ந்தெடுப்பர். அதில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்

பச்சை அம்மனுக்கு குங்கும அபிஷேகம செய்வது நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே!

நீங்கள் இரு சிந்தனை மிக்கவர். முடிவெடுப்பதற்கு தாமதம் செய்வீர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

பணப்பற்றாக்குறை வந்தாலும் கடைசியில் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் சில தடை, தாமதம் உண்டாகி பின் காரியம் கைகூடும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் திடீர் பணவரவு உண்டு. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

கணவன் - மனைவியிடையே இருந்துவந்த பிணக்குகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களை வி.ஐ.பிகளால் பாராட்டப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த காரியங்கள் நிகழும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிக்கும்படி நல்ல மதிப்பெண்களை பெறுவதற்காக தாங்கள் கடுமையாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்

சரபேஷ்வருக்கு இளநீர் அபிஷேகம செய்வது நல்லது.

துலாம்

துலா ராசி அன்பர்களே!

நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர். யாரையும் புண்படுத்தாதவர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு வீட்டு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக செலவுகளும் வீண் விரயங்களும் உண்டாகும். அதனை தங்களது சம்பளத்திலேயே சரிகட்டப்பார்ப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு வியாபாரம் செழித்தோங்கும். மற்றும் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். உணவில் எச்சரிக்கை அவசியம்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில் நல்லது நடக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.

கலைஞர்களுக்கு

தாங்கள் சினிமா சம்பந்தப்பட்ட விசயத்திற்காக திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். மாணவர்களுக்கு

மேற்படிப்பிற்காக முயற்சிக்கும் மாணவர்களுக்கு அரசின் கல்விக்கடன் கிடைக்கும். பட்டயப்படிப்பில் உள்ள மாணவர்களும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர்.

பரிகாரம்

அரசமர பிள்ளையார் கோவிலுக்கு வியாழக் கிழமை சென்று அருகம்புல் சாத்துவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!

எல்லோரிடமும் வேடிக்கையாகப் பேசி தன்பால் ஈர்க்கும் சுபாவமிக்கவர் நீங்கள். தங்களால் மற்றவர்களுக்கு இன்பத்தை தவிர துன்பத்தை ஒரு போதும் தர இயலாது.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். சம்பள உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு

எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத்தலைவிகள் மற்றும் பெண்களுக்கு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற குழந்தை பாக்யம் கிடைக்கும். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு விருதுகள் கிடைக்கும் மாதமாக அமையும். வெளி நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் நன்கு படிப்பர். அதிக மதிப்பெண்களை பெற பல முறை படிப்பது நல்லது. விளையாட்டை தவிர்க்கவும்.

பரிகாரம்

பிரத்தியங்கிரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவிப்பது நல்லது.

1 More update

Next Story