ஜூலை மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்


july month rasipalan for mesham, rishabam, Mithunam, kadagam in tamil
x
தினத்தந்தி 1 July 2025 6:34 AM IST (Updated: 1 July 2025 7:05 AM IST)
t-max-icont-min-icon

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூலை மாத பலன்களை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

சொந்த பந்தம் விட்டு போகாமல் ஒற்றுமையுடன் இருக்க, அனைவரிடமும் விட்டுக் கொடுத்து வாழ்வதில் இன்பம் காண்பவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

நீங்கள் முயற்சி செய்யும் இட மாற்றம் மற்றும் சம்பள உயர்வுக்கான காரியங்களில் சில தடை, தாமதம் உண்டாகி பின் காரியம் கைகூடும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

குடும்பத் தலைவிகளுக்கு

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கணவன் வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும்

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு புதுப்பட வாய்ப்புகள் தங்கள் வாயிற் கதவை தட்டும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு வகுப்பறையில் அரட்டை அடிப்பதை தவிர்ப்பது நல்லது. பாடம் நடத்தும் போது முழுகவனம் அவசியம்.

பரிகாரம்

நரசிம்மருக்கு சனிக் கிழமை அன்று துளசி மாலை அணிவிப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! நான் என்ற கர்வம் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வெளிக்காட்டதவர். தலைகனத்தை என்றும் தலையில் ஏற்றாதவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு உங்கள் அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைப்பதுடன் ஊதியமும் அதிகம் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரத்திற்காக வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள் கைக்கு கிடைக்கும்.

குடும்பத் தலைவிகளுக்கு

அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது என்ற நிலை மாறி அதிகளவு பணம் வரும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் மாணவர்கள் கல்வியில் ஆர்வமில்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிப்பதை தவிர்த்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம்.

பரிகாரம்

அஷ்ட லஷ்மி கோவிலுக்கு வெள்ளிக் கிழமை சென்று தாமரை மலரை சாத்துவது நல்லது.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே!

அழகுணர்ச்சி மிக்கவர் நீங்கள். கலைகளில் ஆர்வம் கொண்டவர். அதில் சாதனை படைக்கும் திறமைசாலி நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும்.எதிர்பாராத பயணங்கள் உண்டு. பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் தங்கள் பிள்ளைகளின் கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கலைஞர்களுக்கு

பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்களுக்கு பிடித்தவரை தேடிச் சென்று பார்த்து அன்பு பரிமாறுவீர்கள். ஒரு சிலருக்கு காதல் திருமணம் நடந்தேறும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் ஆசிரியரிடம் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது நலம். இதனால் தாங்கள் நினைத்த மதிப்பெண்களை பெற வழிவகுக்கும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை அன்று சாந்த நாயகி அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

கடகம்

கடக ராசி அன்பர்களே!

நாலு விசயம் தெரிந்து கொள்வது நல்லது என்று எண்ணுபவர் நீங்கள். அனுபவமே சிறந்த ஆசான் என்பதில் நம்பிக்கைக் கொண்டவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு விலகியிருந்த நண்பர்கள் இனி நெருங்கி வருவார்கள். நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்தால் அந்தப் பணம் சீக்கிரம் வந்து சேராது. ஆதலால் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரம் செய்யும் இளைஞர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கவலை வேண்டாம். மாத மத்தியில் அனைத்தும் சரியாகும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.மொத்ததில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். முதலில் தங்கள் கடமையை செய்த பின்பு நிதானமாக யோசிப்பது நல்லது..

மாணவர்களுக்கு

மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அதன்படி படிப்பிற்கு முக்கியத்துவம் தருவார்கள். நல்ல மதிப்பெண்களும் பெறுவர்.

பரிகாரம்

கால பைரவருக்கு செவ்வாய்க் கிழமை அன்று விபூதி அபிஷேகம் செய்வது நல்லது.

1 More update

Next Story