ஜூலை மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்


july month rasipalan for dhanusu, makaram, kumbam, meenam in tamil
x

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூலை மாத பலன்களை பார்ப்போம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே!

அஜாக்கிரதையுடன் இருப்பவரை கண்டால் தங்களுக்கு பிடிக்காத ஒன்று. எந்த காரியத்தை செய்தாலும் அதில் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த இடமாற்றத்திற்கான அறிகுறிகள் தெரிய வரும். மற்றும் சம்பள உயர்வும் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரம் செய்பவர்கள் உங்கள் முதலீட்டுக்குத் தேவையான தொகையைப் பெற முயற்சி செய்தால் வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.

குடும்பத் தலைவிகளுக்கு

தங்கள் கணவருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு வேற்று மொழிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். அது தங்களுக்கு பேர்சொல்லும் விதமாக அமையும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகங்களை கேட்க வெட்கப்பட வேண்டாம். அன்றன்றே சந்தேகத்தை தீர்த்துக் கொண்டால் தாங்கள் அதிக மதிப்பெண்களை பெற உதவும்.

பரிகாரம்

கிருஷ்ணருக்கு புதன் அல்லது சனி கிழமை அன்று வெண்ணெய் கொடுத்து வழிபடுவது நல்லது.

மகரம்

மகர ராசி அன்பர்களே!

சோம்பேறித்தனம் என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடைகல்லாக தாங்கள் கருதுவீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காண்பவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு

உத்யோஸதர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு வேலை நிமித்தமாக அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளின் அன்பைப் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படும். நல்ல லாபம் உண்டாகும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அதைக் காப்பாற்றத் திணறுவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் . தங்கள் பிள்ளைகள் தங்களின் அன்பை புரிந்து கொண்டு பொறுப்புடன் நடப்பர். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு நினைத்த காரியங்கள் நடந்தேறும். பெற்றோர் சம்மதம் பெற்று காதல் திருமணம் நடக்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் வெளியூர்களில் விடுதிகளில் தங்கி படிப்பவர்கள் உங்கள் நடவடிக்கைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வர வேண்டியது மிக அவசியம்.

பரிகாரம்

புதன் கிழமை வராஹி அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை அல்லது 2 எலுமிச்சை பழமாவது அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்து வருவது நல்லது.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே!

தாங்கள் தூய ஆடை அணிவதுடன் வாசனைத் திரவியங்கனில் பிரியமும் கொண்டவர். இடத்திற்கு தக்கபடி உடை உடுத்துவது உங்கள் தனித்தன்மை.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

வியாபாரிகளுக்கு

பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு இடுப்பு மற்றும் மூட்டுகளில் வலிவந்து போகும். உடலை பராமரிப்பது நல்லது.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு ரசிகர்களின் உற்சாக மிகுதியால் பெரிதும் மனமகிழ்ச்சி அடைவதுடன் உங்கள் பொருளாதார வசதிகளும் பெருகும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் தங்கள் பலவீனமான பாடத்தை பலமுறை படிப்பதன் மூலம் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற இயலும்.

பரிகாரம்

முருகபெருமானுக்கு செவ்வாய் கிழமை அன்று எலுமிச்சை பழத்தை வேலில் குத்துவது நல்லது.

மீனம்

மீன ராசி அன்பர்களே!

தாங்கள் எந்த காரியத்தை செய்தாலும் மற்றவரிடம் பறைசாற்றிக் கொண்டு செய்யமாட்டீர்கள். மாறாக வேலையை முடித்துவிட்டுதான் வெளியே சொல்லும் இயல்புள்ளவர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு விரும்பிய கதாபாத்திரம் கிடைத்து தாங்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் அரைக்குறையாக படிப்பதை நிறுத்திவிட்டு நன்கு மனதில் பதியும் வண்ணம் படிப்பது தங்கள் எதிர்கால வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை அன்று காலை 10 30 லிருந்து 12 வரைக்குள் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுவது நல்லது.

1 More update

Next Story