ஜனவரி மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்


ஜனவரி மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
x
தினத்தந்தி 1 Jan 2026 6:54 AM IST (Updated: 1 Jan 2026 4:00 PM IST)
t-max-icont-min-icon

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான டிசம்பர் மாத பலன்களை பார்ப்போம்.

ஜனவரி மாதப் பலன்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

பின்னால் மற்றவர்களைப் பற்றி புறம்பேசாதவர் நீங்கள். எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசுபவர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் நல்லதொரு மேன்மை கிடைக்கும். நீங்கள் உயர் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுடக்குடன் செய்து முடித்து நற்பெயரை பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் தங்கள் சொந்த ஊரில் நிலங்கள் வாங்கி அதில் தங்கள் வியாபாரத்திற்கு தேவையானவைகளை வாங்கி குடோன்களாக பயன்படுத்துவர்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் தங்கள் வீட்டிற்கு எளிய செலவில் கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். கணவர் வீட்டார் தங்களுக்கு ஆதரவுத் தருவர்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தாங்கள் விரும்பிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். அதில் சம்பாதிக்கும் ஒரு தொகையை வங்கிக் சகணக்கில் டெபாசிட் செய்வீர்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் விடுதியில் இருக்கும் போது அவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அவர்களிடம் அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினையிலிருந்து தப்பிப்பது நன்மை தரும்.

பரிகாரம்

பிரத்தியங்கிராதேவிக்கு செவ்வாய் கிழமை அன்று அவரது பாதத்தில் அரளிப்பூக்களை வைத்து வழிபடுவது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே!

மற்றவர்கள் நிலையை அறிந்து பேசுபவர்கள் நீங்கள். மற்றவர்கள் பிரச்சினையை தன் பிரச்சினைப்போல் பாவிப்பவர்கள் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தங்களுக்கென்று சில முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும். அதனை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு

நகைக்கடை மற்றும் துணிமணிக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்படும். இறுதியில் நல்ல லாபத்தை பெற இயலும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத்தலைவிகள் தங்கள் மாமனார் மற்றும் நாத்தனார் உறவினர் வந்து போவர். ஒரு சிலர் தங்கள் கணவர் வீட்டுக்கும் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த சில ஆசைகளும் நிறைவேறும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தங்கள் படம் நன்றாக ஓடும். ஒப்பனை செய்பவர்கள், கேமராமேன் போன்றவர்களுக்கு படம் ஒப்பந்தமாகும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காண்பிப்பர். எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக கவனமுடன் படித்து எழுதி பார்ப்பது மிக நல்லது.

பரிகாரம்

அருகிலுள்ள மகாலட்சுமி தாயாருக்கு அல்லது மகாலட்சுமி படத்தில் முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே!

உங்களுக்கு மற்றவர்களிடம் ஏமாறுவதும் பிடிக்காது. அதே போல் மற்றவர்களை ஏமாற்றுவதும் பிடிக்காது.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு வேலைகள் அதிகரிக்கும். நிர்வாகத்தின் மேலதிகாரிகளிடம் கவனமாகவும், வாக்குவாதம் செய்யாமலும் இருப்பது நல்லது. எந்த பாகுபாடுமின்றி இருப்பது தேவையற்ற பகையை ஒழிக்கும்.அவர்களுடன் சுமூகமாக பழகி வருவதன் மூலம் தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளிடையே வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். தாங்கள் சம்பாதிக்கும் ஒருத் தொகையை முதலீட்டில் போடுவீர்கள். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத்தலைவிகள் தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள், பெண்களுக்கு பணம் புழங்கும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்தவாறே சம்பளம் கிடைக்கும். நீங்கள் நடித்த படத்தின் மூலம் பலப்படங்கள் தங்களுக்கு ஒப்பந்தமாவீர்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு வகுப்பறையில் அமைதிகாப்பது நல்லது. வீண் அரட்டை வேண்டாம். ஆசிரியர் சொல்படி நடப்பது நன்மை தரும்.

பரிகாரம்

காமாட்சியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

கடகம்

கடக ராசி அன்பர்களே!

அன்பு பாசம் மிக்கவர் நீங்கள். மற்றவர்களுக்காக வாழ்பவர் நீங்கள்தான்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் வேலைகள் அதிகரிக்கும்.வீடு கட்ட தாங்கள் நினைத்த அளவில் அரசுக்கடன் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் ஏற்படும். அதனால் வெளியிடங்களிலும் தங்கள வியாபாரம் . அதனால் வியாபாரிகள் தங்களின் லாபமும் கூடும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் தங்கள் கணவரின் மனம் கோணாதவாறு நடப்பது நல்லது. குறிப்பாக முன் கோபம் வேண்டாம். தேவையற்ற வாக்குவாதமும் வேண்டாம். பொறுமை அவசியம்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தாங்கள் நடித்த படம் பல வருடங்கள் ஆகியும் வெளி வராமல் இருப்பவர்களுக்கு படம் திரையிடப்படும். மேலும், புதிய பட ஒப்பந்தம் செய்வீர்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் தற்போதிலிருந்தே தேர்வில் நன்கு மதிப்பெண்களை பெற சீக்கிரம் காலையில் எழுந்து நன்கு படிப்பது நல்லது.

பரிகாரம்

குரு பகவானுக்கு வியாழக் கிழமை குரு காயத்ரி மந்திரத்தை படித்து வணங்குவது நல்லது.

1 More update

Next Story