ஆகஸ்ட் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத பலன்களை பார்ப்போம்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!
தியாகச் செம்மல் என்றால் அது உங்களுக்குத்தான் பொருந்தும்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகதர்களுக்கு: வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தங்களுக்கென்று சில முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும். அதனை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
வியாபாரிகளுக்கு: வியாபாரிகள் தங்கள் சொந்த ஊரில் நிலங்கள் வாங்கி அதில் தங்கள் வியாபாரத்திற்கு தேவையானவைகளை வாங்கி குடோன்களாக பயன்படுத்துவர்.
குடும்பத் தலைவிகளுக்கு: குடும்பத்தலைவிகள் தங்கள் மாமனார் மற்றும் நாத்தனார் உறவினர் வந்து போவர். ஒரு சிலர் தங்கள் கணவர் வீட்டுக்கும் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த சில ஆசைகளும் நிறைவேறும்.
கலைஞர்களுக்கு: கலைஞர்கள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சவாலாக ஏற்று நடியுங்கள். அது தங்கள் வாழ்வை மாற்றக் கூடிய செயலாக அமையும்.
மாணவர்களுக்கு: மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் விடுதியில் இருக்கும் போது அவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அவர்களிடம் அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினையிலிருந்து தப்பிப்பது நன்மை தரும்.
பரிகாரம்
சனிக்கிழமை அன்று காகத்திற்கு எள்சாதம் வைப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே!
பாட்டி வைத்த்தியத்தையும் இயற்கை உணவுகளையும் அதிகம் நேசிப்பவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு: உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பர். சம்பள உயர்வும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு: வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணத்தால் தாங்கள் நல்ல லாபத்தை பெறுவர்.
குடும்பத் தலைவிகளுக்கு: குடும்பத் தலைவிகள் கணவரின் அன்பைப் பெறுவீர்கள். அவர்கள் தங்களுக்கு உதவிகரமாக இருப்பர். எதிர்ப்பார்த்த சில காரியங்கள் இனிதே முடியும்.
கலைஞர்களுக்கு: கலைஞர்களுக்கு உதாரணமாக டைரக்டர் தங்கள் கதையை பல காலமாக பலரிடம் சொன்னது வீண் போகாமல் பட வாய்ப்புக்கள் கிடைத்துவிடும்
மாணவர்களுக்கு: மாணவ மாணவிகள் ஆசிரியரிடம் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது நல்லது. வெட்கப்பட வேண்டாம். நம் தேவையை கேட்டால்தான் தங்களது படிப்பில் முன்னேற முடியும்.
பரிகாரம்
காமாட்சியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
துலாம்
துலா ராசி அன்பர்களே!
சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. `
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு: உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் கடனில் ஒருபகுதியை அடைத்து பெருமூச்சுவிடுவீர்கள். நீங்கள் உயர் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுடக்குடன் செய்து முடித்து நற்பெயரை பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு: இருக்கும் தொழில் மட்டுமல்லாமல் வேறு ஒரு தொழிலைலும் ஈடுபட்டு அதிலும் அதிக லாபத்தை பெறுவீர்கள். அதுவும் பிற்காலத்தில் நிரந்தரமான ஒரு வருவாயை ஈட்டித்தரும்.
குடும்பத் தலைவிகளுக்கு: குடும்பத் தலைவிகள் தங்கள் வீட்டிற்கு எளிய செலவில் கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். கணவர் வீட்டார் தங்களுக்கு ஆதரவுத் தருவர்.
கலைஞர்களுக்கு: கலைஞர்களுக்கு புது பேணர்களிடம் தங்கள் கதையை சொல்லி தாங்கள் அதில் ஒப்பந்தமாவீர்கள். அதன் மூலம் ஒரு பெரிய திருப்பம் தங்களுக்கு ஏற்படும்.
மாணவர்களுக்கு: பெற்றோருடன் தேவையற்ற வாக்குவாதத்தில் கலந்து கொள்ள வேண்டாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பின்பு அவர்கள் தங்கள் தவறினை உணர்ந்து விடுவர்.
பரிகாரம்
சீனிவாசருக்கு துளசி மாலையை சனிக் கிழமை அன்று சாத்தி வணங்குவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் உண்மையான அன்பை புரிந்து கொள்ளாதவர்களே இங்கு அதிகமாக உள்ளார்கள். புரிந்து கொண்டவர்கள் பாக்கியசாலிகள்தான்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு: உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்கள் தங்களுக்குண்டான மதிப்பையும் மரியாதையும் தருவர்.
வியாபாரிகளுக்கு: வியாபாரிகள் வெளியூர் மற்றும் வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். தாங்கள் செல்லும்போது கவனக்குறைவாக இராமல் தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது.
குடும்பத் தலைவிகளுக்கு: குடும்பத் தலைவிகள் வீட்டிற்குத் தேவையான சமையல் சாமான்களை வாங்கிக் குவிப்பர். பணப் பற்றாக்குறை நீங்கும். தம்பதிளிடையே அன்பு அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு: கலைஞர் பணவரவு சிறப்பாக இருக்கும். மேலும் மேலும் படங்களில் ஒப்ந்தமாவர். நினைத்தவாறு தாங்கள் தங்கள் இலக்கை அடைவீர்கள். நன்மதிப்பும் பெறுவர்.
மாணவர்களுக்கு: மாணவர்கள் எதிரிபாலினரிடத்தில் அதிக நெருக்கமாக பழக வேண்டாம். அது தேவையற்ற தொல்லைகளைத் தரும். பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது.
பரிகாரம்
பிரத்தியங்கிராதேவிக்கு செவ்வாய் கிழமை அன்று அவரது பாதத்தில் அரளிப்பூக்களை வைத்து வழிபடுவது நல்லது.