ஆகஸ்ட் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத பலன்களை பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசிவிடுபவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு: உத்யோகஸ்தர்களுக்கு வேலைகள் அதிகரிக்கும். நிர்வாகத்தின் மேலதிகாரிகளிடம் கவனமாகவும், வாக்குவாதம் செய்யாமலும் இருப்பது நல்லது. எந்த பாகுபாடுமின்றி இருப்பது தேவையற்ற பகையை ஒழிக்கும்.அவர்களுடன் சுமூகமாக பழகி வருவதன் மூலம் தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
வியாபாரிகளுக்கு: வியாபாரிகளுக்கு நகைக்கடை மற்றும் துணிமணிக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்படும். இறுதியில் நல்ல லாபத்தை பெற இயலும்.
குடும்பத் தலைவிகளுக்கு: குடும்பத்தலைவிகள் தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள், பெண்களுக்கு பணம் புழங்கும்.
கலைஞர்களுக்கு: கலைஞர்களுக்கு தாங்கள் சம்பாதித்தத் தொகையை வங்கிக் சகணக்கில் டெபாசிட் செய்வீர்கள். அதிக படங்களில் ஒப்பந்தமாவீர்கள்.
மாணவர்களுக்கு: மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காண்பிப்பர். எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக கவனமுடன் படித்து எழுதி பார்ப்பது மிக நல்லது.
பரிகாரம்
கரிய மாணிக்க பெருமாள் கோவிலுக்குச் சென்று புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!
பச்சை பசேலன இருக்கும் இயற்கையான பகுதிகளை மிகவும் ரசிக்கக்கூடியவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு: உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். அதுவும் தாங்கள் நினைத்த இடத்திலேயே வேலை கிடைத்து அதிக சம்பளம் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு: வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் ஏற்படும். அதனால் வியாபாரிகள் தங்களின் லாபமும் கூடும்.
குடும்பத் தலைவிகளுக்கு: குடும்பத் தலைவிகள் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வர். பணத்தினை ஒரு பகுதி நகை சீட்டாக போடுவீர்கள்.
கலைஞர்களுக்கு: கலைஞர்களுக்கு தங்கள் படம் நன்றாக ஓடும். ஒப்பனை செய்பவர்கள், கேமராமேன் போன்றவர்களுக்கு படம் ஒப்பந்தமாகும்.
மாணவர்களுக்கு: மாணவர்கள் தற்போதிலிருந்தே தேர்வில் நன்கு மதிப்பெண்களை பெற சீக்கிரம் காலையில் எழுந்து நன்கு படிப்பது நல்லது.
பரிகாரம்
துர்கை அம்மனுக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!
வியாபாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் நீங்கள். தொழில் செய்வதற்குண்டான சூழல் அமைந்தால் அதில் நீங்கள்தான் டாப்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு: மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு தாங்கள் நினைத்த இலக்கை எட்டுவது உறுதி. தாங்கள் கேட்ட சில முக்கியமான சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு: வியாபாரிகளிடையே வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். தாங்கள் சம்பாதிக்கும் ஒருத் தொகையை முதலீட்டில் போடுவீர்கள். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு: குடும்பத் தலைவிகளுக்கு பணம் தாராளமாக புழங்கும். உறவினர், வருகை மகிழ்ச்சியைத் தரும். தங்கள் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து மனம்கிழ்வீர்கள்.
கலைஞர்களுக்கு: கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்தவாறே சம்பளம் கிடைக்கும். நீங்கள் நடித்த படத்தின் மூலம் பலப்படங்கள் தங்களுக்கு ஒப்பந்தமாவீர்கள்.
மாணவர்களுக்கு: மாணவர்களுக்கு வகுப்பறையில் அமைதிகாப்பது நல்லது. வீண் அரட்டை வேண்டாம். ஆசிரியர் சொல்படி நடப்பது நன்மை தரும்.
பரிகாரம்
காளிஅம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று அரளிப் பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.
கடகம்
கடக ராசி அன்பர்களே!
பெண்களிடம் மரியாதை கொடுப்பதில் உங்களை விட சிறந்தவர் யாருமில்லை என சொல்லலாம்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு: உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் வேலைகள் அதிகரிக்கும்.வீடு கட்ட தாங்கள் நினைத்த அளவில் அரசுக்கடன் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.
வியாபாரிகளுக்கு: நீங்கள் வியாபாரம் விரிவடைய தேவையான சில தொழில்நுட்ப யுத்திகளை செய்து முடிப்பீர்கள். ஒரு சிலர் தங்கள் சொந்த ஊரிலும் தங்கள் தொழிலை விரிவாக்குவர்.
குடும்பத் தலைவிகளுக்கு: குடும்பத் தலைவிகள் தங்கள் கணவரின் மனம் கோணாவாறு நடப்பது நல்லது. குறிப்பாக முன் கோபம் வேண்டாம். தேவையற்ற வாக்குவாதமும் வேண்டாம். பொறுமை அவசியம்.
கலைஞர்களுக்கு: கலைஞர்களுக்கு தாங்கள் நடித்த படம் பல வருட்ங்களாக ஆகியும் வெளி வராமல் இருப்பவர்களுக்கு படம் திரையிடப்படும். மேலும், புதிய பட ஒப்பந்தம் செய்வீர்கள்.
மாணவர்களுக்கு: மாணவர்கள் படிப்பில் நல்ல ஆர்வம் ஏற்பட்டு நன்கு படிப்பர். பெற்றோர்கள் தாங்கள் நல்ல மதிப்பெண்களை பெற உதவிகரமாக இருப்பர்.
பரிகாரம்
மகாலட்சுமி தாயாருக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.
கணித்தவர்
திருமதி. N. ஞானரதம்
Cell: 9381090389