தஞ்சாவூர்: ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (22 வயது). ஐ.டி.ஊழியரான இவர் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தலைவன் தலைவி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
கடந்த மாதம் 25-ந்தேதி வெளியான 'தலைவன் தலைவி' படம் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. படம் வெளியான உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது. மேலும் தமிழ் நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனால் தலைவன் தலைவி திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக உருமாறியுள்ளது. இதனால் படக்குழு, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
"வாக்கு திருட்டு - அடிப்படை உரிமை கேள்விக்குள்ளாகிறது" - ராகுல்காந்தி
"நேர்மையான தேர்தலுக்கு தவறில்லாத வாக்காளர் பட்டியல்தேவை. டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். என் வாக்கு என் உரிமை, என்ற அடிப்படை உரிமையை வாக்குத்திருட்டு கேள்விக்குள்ளாக்குகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
மயிலாடுதுறை பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்
தூய்மை பணியாளர்கள் போராட்டம் - சீமான் ஆதரவு
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? குப்பை அள்ளுவதை தனியாரிடம் கொடுத்து விட்டு அரசு என்ன செய்யும்? மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்வது ஏன்?" என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.. அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்றுள்ளார்கள்.
இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.