சென்னை,
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர் மழை எதிரொலியாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.60ஆக விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தரம் 50 ரூபாய், மூன்றாம் தரம் 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் ரூ.60-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.70 முதல் ரூ.80 வரையும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
உருளைக்கிழங்கு ரூ.30, ரூ.20, ரூ.18 என மூன்று விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.40, ரூ.50, ரூ.60 என்று விற்பனை செய்யப்படுகிறது. கத்திரிக்காய் 10 ரூபாய் உயர்ந்து 30 முதல் 35 ரூபாய்க்கும், வரி கத்திரிக்காய் விலை மாறாமல் 15 முதல் 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.