உலகம் எதிர்பார்க்கிறது போர்க்களங்கள் மூடப்படுமென்று ; வைரமுத்து பதிவு

போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-08-11 10:18 IST

சென்னை,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, அலாஸ்காவில் சந்தித்துப் பேச உள்ளனர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வரும் நிலையில், இரு தலைவர்களின் சந்திப்பால் போர் முடியுமா என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வைரமுத்து கூறியிருப்பதாவது:

வாழப் பிறந்தோம்

இயற்கை வழியில்தான்

சாகப் பிறந்தோம்

போர் என்னும்

செயற்கைச் சாவு ஒழிக

டிரம்ப் புதின் சந்திப்பினால்

ரஷ்ய உக்ரைன் போர்

முடிவுக்கு வருக

தரையில் சிந்திய

ரத்தம் உலர்க

உக்ரைனின்

புகையடித்த மரங்களில்

பூக்கள் மலர்க

வெள்ளை

வெள்ளையாய்க்காணும்

கொள்ளைக் குழந்தைகள்

பள்ளி செல்க

உலகத் தலைவர்களே!

உலகம் எதிர்பார்க்கிறது

போர்க்களங்கள் மூடப்படுமென்று

புதிய சூரியன்

திறக்கப்படுமென்று

பாவேந்தரே சொல்லய்யா

"கெட்ட போரிடும் உலகத்தை

வேரொடு சாய்ப்போம்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்