இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு புதிய முயற்சியை கையிலெடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.அலாஸ்காவில் நடைபெறும் ரஷிய அதிபர் புதின் உடனான சந்திப்பின் போது உக்ரைன் அதிபரையும் பங்கேற்க அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து இன்று காலை 69.75 அடியானது. நீர்வரத்து உயரும் பட்சத்தில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் மதுரை, ராமநாதபுரம் உள்ளனர். 5 மாவட்டங்களைச் சேர்ந்த கரையோர பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 475 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
மியான்மருக்கு எதிரான கால்பந்து போட்டியில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று u -20 மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தொடருக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் அணி. 20 ஆண்டுகளுக்குப் பின்பு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளதால் வீரர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு சொந்தமான எப்-35பி போர் விமானம் ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏற்கனவே இந்தியாவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட எப்-35பி விமானம், 37 நாட்களுக்குப் பிறகு, கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
கருப்பாயூரணி கல்குவாரி குட்டையில் விழுந்து, சையது அலி சஹானா [வயது 9), ஆசிக் ராஜா (வயது 3) ஆகிய இரு குழந்தைகள் பரிதாப பலியாகினர்.
சென்னையில் நாளை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கூடுதல் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 135 மின்சார பேருந்துகள் மற்றும் 55 குளிர்சாதன பேருந்துகள் சேவையை தொடங்குவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்திய விமானங்களுக்கு வான்பரப்பை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ. 126 கோடி இழப்பு
13 நாடுகளைச் சேர்ந்த 99 மாணவ, மாணவியர்கள் உட்பட 120 பேர் இன்று 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ் கீழடி அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தனர்.
பூம்புகார்: பாமக மகளிர் மாநாட்டில் திடீரென மழை பெய்ததால், இருக்கைகளை தலையில் வைத்து மாநாட்டினை பார்வையிட்டு வரும் மக்கள்.