13 வயது மகளை விபசாரத்தில் தள்ளி பல ஆண்களுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்
மாணவியின் தாயாருக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு ஊரில் வசிக்கும் 13 வயது மாணவி, விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் பள்ளி விடுமுறையின்போது வீட்டுக்கு சென்ற தன்னை, தனது தாயும், அவரது 3-வது கணவரும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், தன்னை பல ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பள்ளி ஆசிரியரிடம் கூறி அழுதார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், குழந்தைகள் உதவி மையம் மற்றும் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியின் தாயாருக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 3-வது கணவருடன அவர் வசித்து வருகிறார். 3-வது கணவரும், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அத்துடன் மாணவியின் தாயாருடன் சேர்ந்து மாணவியை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. தாயின் கொடுமை தாங்காமல் மாணவி, விடுதியிலேயே இருந்து உள்ளார். ஆனால் அவரது தாயார், விடுமுறையில் வீட்டுக்கு வரும்படி மகளை அன்பாக அழைத்துச்சென்று, மீண்டும் வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளி உள்ளார்.
இதற்காக மதுராந்தகத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து, அங்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து மாணவியை அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு பல ஆண்கள், மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பள்ளி விடுமுறை நாட்களில் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து பல ஆண்களுக்களுக்கு மாணவியை விருந்தாக்கியதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பெற்ற மகளை விபசாரத்தில் தள்ளியதாக மாணவியின் தாயார், அவரது 3-வது கணவர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.