நடுவானில் இயந்திரக் கோளாறு - சென்னையில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

உரிய நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.;

Update:2025-08-11 08:03 IST

சென்னை,

திருவனந்தபுரத்திலிருந்து 5 எம்.பி.க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, நேற்று இரவு சென்னையில் அவசரமாக தரையிறங்கியது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் எம்.பி.க்கள் மற்றும் பயணிகள் அனைவரும் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்