சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.74,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.9,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரசிகர்களின் வேண்டுகோள்.. 'கூலி' பட இடைவேளையில் நாகார்ஜுனாவின் ஹிட் பாடல்
கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ் நாட்டில் சில பகுதிகளில் கூலி திரையிடப்படும் திரையரங்குகளில் நாகார்ஜுனாவின் ரட்சகன் படத்திலிருந்து 'சோனியா சோனியா' பாடலை திரையில் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். தியேட்டர் உரிமையாளர்களும் இடைவேளையின்போது அந்தப் பாடலை போட்டு ரசிகர்களை மகிழ்வித்தனர்.
திரையுலகில் சோகம்...பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர் காலமானார்
மராத்தி திரையுலகில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர் (69) காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த 16-ம் தேதி மாலை 4 மணியளவில் காலமானார்.
‘ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’ - இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. விரைவில் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செல்கிறார்.
இந்நிலையில், ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், ஜெர்மன் அதிபர் பிரைட்ரிச் மெர்சும் வீடியோ அழைப்பில் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். அவர் உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புதின் நிறுத்தும் வரை, ரஷியா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிப்போம் என்று தெரிவித்தார்.
தெருநாய் விவகாரம் - பிரபலங்களை கடுமையாக சாடிய இயக்குனர் ராம் கோபால் வர்மா
தெரு நாய்கள் விவகாரத்தில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சதா, ஜான்வி கபூர், சோனாக்சி சின்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா பிரபலங்களை கடுமையாக சாடி இருக்கிறார்.
ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், சிராஜ் இடம்பெறுவார்களா..? வெளியான புதிய தகவல்
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காளதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நாளை (19-ம் தேதி) அறிவிக்கப்பட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் ஆகியோர் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ‘ஆண்டர்சன் - தெண்டுல்கர்’ (இங்கிலாந்து டெஸ்ட் தொடர்) தொடரில் அசத்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோருக்கு இடமில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
''எனக்கு அந்த கெட்ட பழக்கம் இருக்கு'' - தனுஷ் பட நடிகை...ரசிகர்கள் அதிர்ச்சி
சமீபத்தில், ஒரு நட்சத்திர நடிகை தனது கெட்ட பழக்கம் குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளியிட்டார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி ரெயில் முன்பதிவு - சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 17-ந்தேதி சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்றும், அக்டோபர் 18-ந்தேதி (சனிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளையும் (செவ்வாய்க்கிழமை), அக்டோபர் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்பவர்கள் வருகிற 20-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கான அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. டிக்கெட் கிடைக்காதவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முன்பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.