‘ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’ -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025

‘ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’ - இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. விரைவில் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செல்கிறார்.

இந்நிலையில், ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், ஜெர்மன் அதிபர் பிரைட்ரிச் மெர்சும் வீடியோ அழைப்பில் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். அவர் உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புதின் நிறுத்தும் வரை, ரஷியா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிப்போம் என்று தெரிவித்தார்.

Update: 2025-08-18 03:57 GMT

Linked news