ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், சிராஜ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025

ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், சிராஜ் இடம்பெறுவார்களா..? வெளியான புதிய தகவல்

நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காளதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நாளை (19-ம் தேதி) அறிவிக்கப்பட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் ஆகியோர் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ‘ஆண்டர்சன் - தெண்டுல்கர்’ (இங்கிலாந்து டெஸ்ட் தொடர்) தொடரில் அசத்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோருக்கு இடமில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-08-18 03:22 GMT

Linked news