பழனியில் ரோப் கார் சேவை நாளை மீண்டும் தொடக்கம்
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணி தற்போது முடிவடைந்துள்ளது.;
கோப்புப்படம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. மலையில் கோவில் அமைந்திருப்பதால் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறிச்சென்று முருகனை வழிபடும் நிலை உள்ளது.
இந்த நிலையில், மலையேறிச் சென்று முருகனை தரிசிக்க சிரமப்படும் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை தொடங்கப்பட்டது. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணி தற்போது முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்பட இருக்கிறது. காலை 9 மணிக்கு இந்த சேவை தொடங்கும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.