மும்பை - சென்னை இடையே இண்டிகோ விமான சேவை ரத்து

மும்பையில் வரலாறு காணாத அளவில் இன்று மழை பெய்து வருகிறது.;

Update:2025-08-19 13:03 IST

கோப்புப்படம்

மும்பை,

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பையில் வரலாறு காணாத அளவில் இன்று மழை பெய்து வருகிறது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாது, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மும்பையில் நிலவும் தொடர் மழை, மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், மும்பை - சென்னை இடையே 4 விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்