உலக புகைப்பட தினம்: புகைப்பட கலைஞர்களை போட்டோ எடுத்து அசத்திய மு.க.ஸ்டாலின்
கேமராவை வாங்கி, அனைத்து புகைப்பட கலைஞர்களையும் ஒன்றாக அமரச் செய்து புகைப்படம் எடுத்து முதல்-அமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தினார்.;
சென்னை,
உலக புகைப்பட தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, "தினமும் நீங்கள் என்னை புகைப்படம் எடுக்குறீர்கள். இன்று ஒரு நாள் நான் உங்களை படம் எடுக்கிறேன்" என்று உற்சாகமாக கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புகைப்பட கலைஞர் ஒருவரிடம் இருந்த கேமராவை வாங்கி, அனைத்து புகைப்பட கலைஞர்களையும் ஒன்றாக அமரச் செய்து புகைப்படம் எடுத்து அசத்தினார்.
மேலும், இந்த நிகழ்வின்போது, உடல் உறுப்பு தானம் செய்த 42 புகைப்பட கலைஞர்களுக்கு அதற்கான பாராட்டு சான்றிதழையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
இதற்கிடையே, உலக புகைப்பட தினத்தையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
நொடியில் கரைந்து செல்லும் நிகழ்வுகளை ஞாபகங்களென - வரலாற்று ஆவணங்களென அழகியலுடனும் கலைநயத்துடனும் காலத்தால் அழியாத வகையில் உறையச் செய்திடும் புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.