ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கைக்கு விளக்கமளிக்க அன்புமணிக்கு மேலும் அவகாசம்

16 குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.;

Update:2025-08-19 13:08 IST

சென்னை,

நேற்று முன் தினம் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாசை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், 2024 டிசம்பர் 28ல் நடந்த பொதுக்குழுவில் மைக்கை துாக்கி போட்டு, ராமதாசை எதிர்த்து பேசியது, பனையூரில் தனி அலுவலகம் அமைத்தது, ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு மாவட்டச் செயலர்களை வரவிடாமல் தடுத்தது, ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு கட்சிக்கு களங்கத்தையும், குழப்பத்தையும், பிளவையும் ஏற்படுத்தியது உட்பட 16 குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அன்புமணி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணிக்கு மேலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரைக்குப் பின், அன்புமணிக்கு ஆகஸ்ட் 31 வரை கெடு விதித்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

Tags:    

மேலும் செய்திகள்