நாகர்கோவில்-கோவை ரெயிலுக்கு மேலப்பாளையத்தில் நிறுத்தம்: பயணிகள் வரவேற்பு
நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ரெயில், மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.;
நெல்லை,
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் விரைவு ரெயில் மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ராபர்ட் புரூஸ் எம்.பி. மேலப்பாளையத்தில் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன்பலனாக நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ரெயில் நேற்று காலை 9 மணிக்கு மேலப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த பயணிகள் ரெயிலில் ஏறினர். ரெயில் ஓட்டுனர்களுக்கு மேலப்பாளையம் ரெயில் பயணிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் முத்துவேல், முகம்மது கக்கூர், காதர் மைதீன், நசுருல்லா வக்கீல் மதார் மைதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.