தீபாவளி ரெயில் முன்பதிவு - சில நிமிடங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025

தீபாவளி ரெயில் முன்பதிவு - சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 17-ந்தேதி சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்றும், அக்டோபர் 18-ந்தேதி (சனிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளையும் (செவ்வாய்க்கிழமை), அக்டோபர் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்பவர்கள் வருகிற 20-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கான அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. டிக்கெட் கிடைக்காதவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முன்பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

Update: 2025-08-18 03:07 GMT

Linked news