இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

Update:2025-07-16 09:24 IST
Live Updates - Page 2
2025-07-16 11:01 GMT

மயிலாடுதுறை: ரூ.432 கோடி மதிப்பீட்டிலான 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.7.2025) மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.48 கோடியே 17 லட்சம் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.113 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 271 கோடியே 24 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு வழங்கினார்.

2025-07-16 08:08 GMT

11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை மையம்

* சென்னை

* திருவள்ளூர்

* காஞ்சிபுரம்

*செங்கல்பட்டு

* திருவண்ணாமலை

* வேலூர்

* ராணிப்பேட்டை

* நீலகிரி

* கோவை

* தேனி

* தென்காசி

2025-07-16 08:08 GMT

நீட் மறுதேர்வு மனு - விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு ஒப்புதல்


மின்தடையால் நீட் மறுதேர்வு நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதை எதிர்த்த மனுவை விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி மத்திய பிரதேச ஐகோர்ட்டின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு மனுவை அடுத்த வாரம் விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

2025-07-16 08:04 GMT

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி

கோவை: பெரியநாயக்கன் பாளையத்தில் கணவர் ராதா கிருஷ்ணன் (92) இறந்த துக்கம் தாளாமல் அழுது கொண்டிருந்த அவரின் மனைவி சரோஜா (82) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். எப்போதும் இணை பிரியாமல் ஒன்றாக இருந்த இந்த தம்பதி, ஒரே நாளில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025-07-16 08:04 GMT

கேரளா: பாலக்காடு பகுதியில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி


கேரளாவின் மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன்படி பாலக்காடு, மலப்புரத்தில் 3 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் தொடர்பில் இருந்த 675 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில்பாலக்காடு பகுதியில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நிபா பாதிப்பால் 59 வயதான நபர் உயிரிழந்த நிலையில், அவரின் மகனுக்கு நிபா உறுதி செய்யப்பட்டுள்ளது.

2025-07-16 08:03 GMT

மரத்தை வெட்டிய 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

இங்கிலாந்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023ல் மரத்தை வெட்டிய கிரகாம், காருதெர்ஸ் இருவரும் அதனை வீடியோ ஆகவும் பதிவு செய்திருந்தனர்.

2025-07-16 08:00 GMT

நெல்லை சாந்தி அல்வாவில் தேள் - அதிகாரிகள் ஆய்வு

நெல்லையில் உள்ள பிரபல சாந்தி அல்வா கடையின் அல்வாவில் தேள் இருந்ததாக வாடிக்கையாளர் புகார் அளித்ததையடுத்து கடை, குடோனில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தேள் இருந்தது குறித்து விளக்கம் கேட்டு கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

2025-07-16 07:51 GMT

"எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் 'குட் பை' சொல்லப் போறாங்க.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.


2025-07-16 07:49 GMT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: வரும் 27ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முன்னதாக, வரும் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்ட உள்ளது.

2025-07-16 07:10 GMT

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு


அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வரை ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆஜரானார்.

கடந்த மாதம் 16ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் விசாரணை தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்