ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு - விசாரணை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு


அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வரை ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆஜரானார்.

கடந்த மாதம் 16ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் விசாரணை தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2025-07-16 07:10 GMT

Linked news