படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியையான பழங்குடியின பெண் ; குவியும் பாராட்டு

கன்னியாகுமரியில் படித்த பள்ளியிலேயே பழங்குடியின பெண், தலைமையாசிரியையாக பதவி ஏற்றுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.;

Update:2025-07-17 09:47 IST

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்த நிலையில் தற்போது பத்து காணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையாக பொறுப்பேற்றுள்ளார்.

ஷீலாவுக்கு மது என்ற கணவரும், சபரீஷ்,சக்திவேல் என்ற 2 மகன்களும் உள்ளனர். மது ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்று வருகிறார். சபரீஷ் 12-ம் வகுப்பும், சக்திவேல் 9-ம் வகுப்பும் படிக்கிறார்கள். தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக, பழங்குடியின பெண் ஷீலா பொறுப்பேற்ற சம்பவத்தை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் அவருடைய பெருமை பற்றிய வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்