ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவை பகுதியளவு ரத்து

பெங்களூரு - ஜோலார்பேட்டை செல்லும் மெமு ரெயிலும் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.;

Update:2025-07-17 17:51 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஜோலார்பேட்டை நிலையத்தில் மின்னணு பூட்டுப் பணி காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, ரெயில் சேவைகளின் முறையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

ஈரோடு - ஜோலார்பேட்டை:-

ஈரோட்டில் இருந்து காலை 06.00 மணிக்கு ஜோலார்பேட்டை புறப்படும் (வண்டி எண்.56108). ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில், ஜூலை 19, 2025 அன்று இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து திருப்பத்தூருக்கு மட்டுமே இயக்கப்படும். அன்று திருப்பத்தூரிலிருந்து ஜோலார்பேட்டைக்கு இயக்கப்படாது.

ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு ஈரோடு புறப்படும் (வண்டிஎண்.56107) ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில், ஜூலை 19, 2025 அன்று திருப்பத்தூரிலிருந்து புறப்பட்டு ஈரோடு வரை இயக்கப்படும். அன்று ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூருக்கு இயக்கப்படாது.

பெங்களூரு - ஜோலார்பேட்டை:-

ஜூலை 19, 2025 அன்று காலை 08.45 மணிக்கு பெங்களூருவிலிருந்து ஜோலார்பேட்டை புறப்படும் மெமு ரெயில் (எண்: 66550), பெங்களூருவிலிருந்து புறப்பட்டு சோமநாயக்கன்பட்டி வரை இயக்கப்படும். சோமநாயக்கன்பட்டிக்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையில் இயக்கப்படாது.

ஜூலை 19, 2025 அன்று பிற்பகல் 2.55 மணிக்கு ஜோலார்பேட்டையிலிருந்து பெங்களூருக்கும் புறப்படும் மெமு ரெயில், (எண் 66549) ஜோலார்பேட்டைக்கும் சோமநாயக்கன்பட்டிக்கும் இடையில் பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரெயில் பிற்பகல் 3.06 மணிக்கு சோமநாயக்கன்பட்டியில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்