ஓரணியில் தமிழ்நாடு எனக் கைகோர்க்கும் குடும்பங்கள்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஓரணியில் தமிழ்நாடு எனக் கைகோர்க்கும் குடும்பங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை' குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் அடுத்த 30 நாட்களில்.. 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது திமுகவினர் கலந்துரையாட வேண்டும் என்றும் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லையெனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம் என மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
உறவென விருந்தோம்பல் வழங்கி, ஓரணியில் தமிழ்நாடு எனக் கைகோர்க்கும் குடும்பங்கள்!. "எனது கணவர் மாற்றுக்கட்சியில் கிளைச் செயலாளர். அவரைத் தவிர எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் தி.மு.க.,வில் இணைத்துக் கொள்கிறோம்" எனக் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணர்வாகி, உடன்பிறப்புகள் பெருக வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.