திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.;

Update:2025-07-17 17:19 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோவிலில் தனியார் ஒப்பந்த காவலாளியாக வேலை பார்த்து வந்தவர், அஜித்குமார் (வயது 29). நிகிதா என்ற பேராசிரியை அளித்த நகை மாயம் புகார் தொடர்பாக மானாமதுரை தனிப்படை போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 3 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் மதுரை, மடப்புரம், திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அஜித்குமார் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக மடப்புரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக் வேல், பிரவீன் குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், செக்யூரிட்டி வினோத் குமார் மற்றும் நவீன் குமார் ஆகியோர் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்