'ப' வடிவ வகுப்பறை இருக்கைகள் - அன்பில் மகேஷ் விளக்கம்
'ப' வடிவிலான வகுப்பறை அமைப்பது, சோதனை முயற்சி தான். பயனுள்ள இடங்களில் பயன் படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் மற்றும் காஞ்சீபுரம் மவாட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் உடனான கலந்தாய்வு கூட்டங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-
மாணவர்களின் புரிதல் திறனை அறியவே, அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. கேள்வி கேட்கும் அளவிற்கு மாணவர்களை உருவாக்க வேண்டும். அதுபோல், தான் கற்றதை, பிற மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரி யர்களாகவும் அவர்களை உருவாக்க 'வேண்டும். சில மாவட்டங்களில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வில் உயர்ந்திருந்தா லும், அடைவுத்திறன் தேர்வில் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய மாணவர்களுடன் ஆசிரியர்கள் உரை யாட வேண்டும்.போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ள பகுதி நேர ஆசிரியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ள னர். முதல் - அமைச்சர் இது தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பார். தற்போது 'ப'வடி விலான வகுப்பறை அமைப்பது, சோதனை முயற்சி தான். பயனுள்ள இடங்களில் பயன் படுத்திக் கொள்ளலாம். அரசாணை எதுவும் பிறப்பிக்க வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.