கேரளா: பாலக்காடு பகுதியில் மேலும் ஒருவருக்கு நிபா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
கேரளா: பாலக்காடு பகுதியில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி
கேரளாவின் மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன்படி பாலக்காடு, மலப்புரத்தில் 3 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் தொடர்பில் இருந்த 675 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில்பாலக்காடு பகுதியில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நிபா பாதிப்பால் 59 வயதான நபர் உயிரிழந்த நிலையில், அவரின் மகனுக்கு நிபா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-07-16 08:04 GMT