திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாத சிறப்பு உற்சவங்கள்
திருப்பதி திருமலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பவித்ரோத்சவம் நடைபெறுகிறது.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் மற்றும் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன. இது குறித்த தகவல்களையும், அட்டவணைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் (ஆகஸ்ட் 2025) எந்தெந்த தேதிகளில் என்னென்ன உற்சவங்கள் நடைபெற உள்ளன என்பது தொடர்பான அட்டவணையை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
ஆகஸ்ட் 2: மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா நினைவுநாள்.
ஆகஸ்ட் 4: வருடாந்திர பவித்ரோற்சவத்திற்கான அங்குரார்ப்பணம்
ஆகஸ்ட் 5 முதல் 7 வரை: பவித்ரோற்சவம்
ஆகஸ்ட் 8: ஆளவந்தார் திருநட்சத்திர விழா
ஆகஸ்ட் 9: சிரவண மாத பௌர்ணமி கருட சேவை.
ஆகஸ்ட் 10: வைகானசாச்சாரியார் சன்னதியில் மலையப்ப சுவாமி எழுந்தருளல்
ஆகஸ்ட் 16: கோகுலாஷ்டமி ஆஸ்தானம்
ஆகஸ்ட் 17: சிக்யோத்ஸவம்
ஆகஸ்ட் 25: பலராமர் ஜெயந்தி மற்றும் வராஹ ஜெயந்தி
அடுத்த மாதம் திருப்பதி செல்ல திட்டமிட்டிருக்கும் பக்தர்கள், திருப்பதியில் நடைபெற உள்ள இந்த உற்சவங்கள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப தங்களின் பயண திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்.