நவக்கிரக வழிபாடும் பலன்களும்

நவக்கிரகங்களை வழிபடும்போது, எந்த கிரகத்தையும் தொட்டு வணங்கக் கூடாது என்பது ஐதீகம்.;

Update:2025-07-30 14:04 IST

இந்து மதத்தில் நவக்கிரக வழிபாடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களை நவக்கிரகங்கள் என்கிறோம். ஒருவருக்கு ஜாதக ரீதியாக எந்த கிரகத்தால் பிரச்சினை நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து, அதற்குரிய கிரகங்களை வழிபட்டு உரிய நிவாரணத்தை பெறலாம்.

கோவிலுக்கு சென்றால் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு, பின்னர் கோவிலில் உள்ள மற்ற அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின்னர் கடைசியாகத்தான் நவக்கிரகங்களை தரிசிக்க வேண்டும். பொதுவாக நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றி வழிபடுவது வழக்கம். நவக்கிரகங்களை வழிபடும்போது, எந்த கிரகத்தையும் தொட்டு வணங்க கூடாது என்பது ஐதீகம்.

நவக்கிரக வழிபாட்டில் ஒவ்வொரு கிரகத்தையும் வழிபட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கிரகத்துக்குரிய பலனும் கிடைக்கும்.

* சூரிய பகவானை வழிபட்டால் வாழ்வில் ஆரோக்கியமும், மங்களமும் கிடைக்கும்.

* சந்திர பகவானை வணங்கினால் அவரைப் போல் பிரகாசமான புகழ் கிடைக்கும்.

* செவ்வாய் பகவானை (அங்காரகனை) வணங்கினால் தைரியம் அதிகரிக்கும்.

* புதன் பகவானை (கல்வி அதிபதி) வழிபட்டால் நல்ல புத்தியும், சிறந்த அறிவாற்றலும் கிடைக்கும்.

* குரு பகவானை (வியாழன்) வழிபட்டு வந்தால் குறையாத செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

* சுக்ர பகவானை (வெள்ளி) வணங்கினால் நல்ல மனைவி அமைவதோடு, வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

* சனி பகவானை வழிபட்டு வந்தால் ஆயுள் பெருகும்.

* ராகு பகவானை வணங்கி வந்தால் நாம் செய்யும் பயணத்தால் நன்மைகள் கிடைக்கும்.

* கேது பகவானை வழிபட்டு வந்தால் ஞானம் பெருகுவதோடு, ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அதன் மூலம் மோட்சம் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்