ஆறுமுகநேரி பத்ரகாளியம்மன் கோவிலில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற கொடை விழா

திருவிளக்கு பூஜையில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.;

Update:2025-07-31 11:58 IST

திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள்

ஆறுமுகநேரி மெயின் பஜாரில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கொடை விழா 3 தினங்கள் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளில் கணபதி ஹோமம், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. இரவு சமய சொற்பொழிவு, அதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

இரண்டாம் நாள் நடப்பு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 12 மணி அளவில் மாகாப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

மூன்றாவது நாள் பகல் 12 மணி அளவில் அலங்கார பூஜையும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இரவு 11 மணி அளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. ஆறுமுகநேரி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் அமைந்துள்ள பிரம்மசக்தி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரியுடன் வந்து பத்திரகாளியம்மன் கோவிலில் சமர்ப்பித்தனர். அதனை தொடர்ந்து நடு சாம பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்