திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ.3.84 கோடி

கோவில் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து பணம் மற்றும் நகைகள் எண்ணப்பட்டன.;

Update:2025-08-01 12:29 IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அவ்வகையில் ஜூலை மாத உண்டியல் வருமானம் நேற்று கணக்கிடப்பட்டது.

கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பணம் மற்றும் நகைகள் எண்ணப்பட்டன. கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர் நாகவேல், நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

உண்டியல்களில் காணிக்கையாக ரூ.3 கோடியே 84 லட்சத்து 64 ஆயிரத்து 297 கிடைத்துள்ளது. அதேபோல் 1 கிலோ 530 கிராம் தங்கமும், 22 கிலோ 500 கிராம் வெள்ளியும், 833 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்