கன்னியாகுமரி: சாய்பாபா, ராகவேந்திரா கோவிலில் குரு வார வழிபாடு

பொற்றையடி சாய்பாபாவுக்கு பால், தயிர் உள்பட பல வகையான திரவியங்களாலும் புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.;

Update:2025-08-01 11:15 IST

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தில் ராகவேந்திரா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனத்தில் குரு வார சிறப்பு வழிபாடு நடந்தது.

இதை யொட்டி ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம், பஜனை, ஆரத்தி, ஆராதனை சத்சங்கம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராகவேந்திரா மோகன் செய்திருந்தார்

இதேபோல கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா ஆனந்த் ஆலயத்தில் குருவார வழிபாடு நடந்தது.

இதையொட்டி சாய்பாபாவுக்கு பால், தயிர் உள்பட பல வகையான திரவியங்களாலும் புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சத்சங்கம், பஜனை, ஆரத்தி, ஆராதனை, பிரசாதம் வழங்குதல் போன்றவை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வணங்கினர்.

சுசீந்திரம் ஆசிரமம் பகுதியில் அமைந்து உள்ள குமரி ராகவேந்திரா மந்திராலயத்தில் குரு வார வழிபாடு நடந்தது. இதையொட்டி ராகவேந்திரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், ஆரத்தி, அலங்கார தீபாராதனை, சத்சங்கம், பஜனை, அன்னதானம் போன்றவை நடந்தன. இரவு அலங்கார தேர் பவனியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்