சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;
சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவிலின் உப கோவிலான கைலாசநாதர் கோவிலில் இன்று சுந்தரர் குருபூஜை விழா நடைபெற்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், பிற நாயன்மார்களுக்கும் விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் 63 நாயன்மார்களின் திருவுருவங்களும், பன்னிரு திருமுறைகளும் 4 ராஜ வீதிகள் வழியாக வாத்தியம் முழங்க திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.