உடன்குடி: சீர்காட்சி தர்மபதியில் ஆடி திருவிழா கொடியேற்றம்- நிகழ்ச்சிகள் முழு விவரம்

ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு திருக்கல்யாண விருந்தைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.;

Update:2025-08-01 16:39 IST

உடன்குடி அருகே உள்ள சீர்காட்சி அய்யா நாராயண சுவாமி தர்மபதியில் ஆடி மாதத்தில் திருவிழா விமரிசையாக நடத்தப்படும். அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா இன்று (1.8.2025) தொடங்கியது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு பணிவிடையைத் தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு திருநாமக் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்னர் உகப்படிப்பு, அய்யா சப்பரத்தில் பதிவலம் வருதல் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான அன்புக் கொடி மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று காலை 7 மணிக்கு பக்தர்களுக்கு சிற்றுண்டி தர்மம், மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சி படிப்பு, மதியம் 1.30 மணிக்கு அன்னதர்மம் நடந்தது. மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, திரு ஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் நடைபெறும்.

நிகழ்ச்சிகள்

நாளை முதல் 6-ம் தேதி வரை தினசரி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சி படிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, திரு ஏடு வாசித்தல், இரவு 9 மணிக்கு சிற்றுண்டி தர்மம் நடக்கிறது.

7ம் தேதி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, ஊர் மக்களிடம் தர்மம் எடுக்க செல்லுதல், மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சி படிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப் படிப்பு, திரு ஏடு வாசித்தல், இரவு 9 மணிக்கு சிற்றுண்டி தர்மம் நடைபெறும்.

8ம் தேதி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, பகல் 1.30 மணிக்கு உம்பான் அன்னதர்மம், மாலை 5 மணிக்கு அன்பு கொடி மக்கள் திருக்கல்யாண சுருள் மற்றும் இனிப்பு பலகாரங்களை பதிக்கு கொண்டு வருதல், இரவு 7 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு, இரவு 8 மணிக்கு அன்னதர்மம், இரவு 9 மணிக்கு திருவிளக்கு பணிவிடை, இரவு 9.30 மணிக்கு திருக்கல்யாண விருந்து, இரவு 11 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி வருதல், இரவு 12 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெறும்.

9ம் தேதி காலை 6 மணிக்கு மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம 12 மணிக்கு பணிவிடை, உச்சி படிப்பு, காலை, மதியம், இரவு அன்ன தர்மம், மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, திரு ஏடு வாசிப்பு, இரவு 10 மணிக்கு அய்யா புஷ்ப வாகனத்தில் பதி பவனியும், சந்தன குடம், மாவிளக்கு பெட்டி எடுத்து வரும்நிகழ்ச்சியும் நடைபெறும்.

10ம் தேதி காலை 6 மணி பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப் படிப்பு, காலை, மதியம், இரவு அன்னதானம், மாலை 6 மணிக்கு அன்பு கொடி மக்கள் பதியில் பால் வைத்தல், இரவு 10 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு பட்டாபிஷேத் திரு ஏடு வாசிப்பு, இரவு 12 மணிக்கு இந்திர வாகனத்தில் நகர் வலம் வருதல், வரும் 11ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருநாமக் கொடி அமர்தல், பள்ளியுணர்தல், இனிமம் வழங்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்