மதுராந்தகம்: மாரிபுத்தூரில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூரில் செல்லியம்மன் கோவில் ஆடி மாத திருத்தேர் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.;

Update:2025-07-30 16:54 IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மாரிபுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா சிறப்பாக நடைபெறும். அவ்வகையில், இந்த ஆண்டு ஆடி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்வான திருத்தேர் உற்சவம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், கோழி மற்றும் கிடா வெட்டி படையலிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்