முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற பால்குட ஊர்வலம்
ஊர்வலத்தில் சென்ற பத்தர்களுக்கு வழிநெடுகிலும் நீர், மோர், பழங்கள் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.;
முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் பூக்குழி கொடைவிழா நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் சீர்வரிசை செய்துவிட்டு அங்கிருந்து ஆலமூடு அம்மன் ஜோதி புறப்பட்டு பல ஊர்கள் வழியாக ஊர்வலமாக ஆலமுடு அம்மன் கோவிலை வந்தடைந்தது.
நேற்று மாலையில் அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வரும் நிகழ்சியும், தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இன்று (29-7-2025) செவ்வாய்க்கிழமை பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. காலையில் ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலிலிருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் பூங்கரகம், முளைபாரி, பால்குடங்கங்கள் சுமந்து வந்தனா. சில பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்தும், சில பக்தர்கள் அலகு குத்தியும் வந்தனர்.
இந்த ஊர்வலம் வடக்கூர் சந்திப்பு, எம்.ஜி.ஆர் நகர், மருத்துவர் நகர், மூவேந்தர் நகர் வழியாக ஆலமுடு அம்மன் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் ஊர்வலத்தில் சென்ற பத்தர்களுக்கு நீர், மோர், பழங்கள் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. கோவிலை சென்றடைந்ததும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளின் பாயாச குளியலும், பின்னர் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
இன்று மாலையில் பூக்குழி பூஜை நடைபெறுகிறது. 41 நாட்கள் மாலை போட்டு விரதம் இருந்த பத்தர்கள் பூக்குழி இறங்குகிறார்கள். நாளை (30.7.2025 ) பொங்கல் வழிபாடு, மஞ்சள் நீராடுதல், அன்னதானம் மற்றும் திருஷ்டி பூஜை ஆகியவை நடக்கிறது.