கருட பஞ்சமி விழா: கருட பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

புனித நீர் மற்றும் பல்வேறு திரவியங்களால் கருட பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update:2025-07-29 13:17 IST

சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் புதுக்கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத உதய மார்த்தாண்ட விண்ணகர எம்பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கருட பஞ்சமி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலை கோவிலில் உள்ள கருட பகவானுக்கு எண்ணெய், பால், தயிர், மஞ்சள்பொடி, களபம், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கருட பகவானுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கருட பகவானை தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேருர் புதுக்கிராமம் பெருமாள் கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்