ஆடி சீசனில் அசத்தலான புதிய நகைகள்... தனிஷ்க் வழங்கும் 'அகல்யம்' கலெக்சன்

பாரம்பரிய வழக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக மங்கையர் மனம் கவரும் அகல்யம் புதிய நகைத் தொகுப்பை தனிஷ்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அகல்யம் - ஆடியில் ஒளிரும் தமிழ் மண்ணின் பாரம்பரியம்
தமிழ் மண்ணை பொறுத்தவரை ஆடி மாதம் என்பது தமிழ் மாதங்களில் புனிதமான ஒன்றாகும். இந்த மாதத்தில் தான் மக்களிடையே தெய்வீக உணர்வு மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவை கலாசார ரீதியாக பலவிதங்களில் அனுசரிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தமிழ் கலாசாரத்தை பின்னணியாக கொண்டும், அதில் ஆழமாக வேரூன்றிய பாரம்பரிய அழகை வெளிப்படுத்தும் விதமாகவும் மங்கையர்கள் மனம் கவரும் வகையில் அகல்யம் என்ற புத்தம் புதிய தங்க நகையை தனிஷ்க் அறிமுகம் செய்திருக்கிறது.
இல்லங்களுக்கு ஒளி தரும் அகல்யம்
அகல்யம் என்பது அகல் விளக்கு என்பதை குறிப்பிடுகிறது. அது அனைத்து தமிழ் இல்லங்களிலும் ஒளிதரும் விளக்காக அன்றாடம் ஏற்றி வைக்கப்படுகிறது. அந்த வகையில் அகல்யம் என்பது ஒரு ஆபரணம் என்பதை விட, அகல் விளக்கு காட்டும் அறிவு, இறையருள், தெய்வீகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்துள்ளது. தமிழ் கலாசாரத்தில் வீடுகளில் அன்றாடம் ஏற்றி வைக்கப்படும் அகல் விளக்கு என்பது புனிதமான காரியங்களுக்கு ஒரு தொடக்கமாக அமைகிறது. கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக இருந்தாலும், மங்களகரமான சடங்குகளை தொடங்குவதாக இருந்தாலும், குடும்ப மரபு மற்றும் திருவிழாக்கள் ஆகிய எதுவாக இருந்தாலும் அகல் விளக்கு ஏற்றி வைக்கப்படுவது தமிழ் மண்ணின் வழக்கம். அதை நினைவுபடுத்தும் விதமாகவும், தொடர்ந்து கடைபிடிக்கப்படும் பாரம்பரிய வழக்கத்தை பிரதிபலிக்கும் விதமாகவும், ஆன்மிக அடையாளம் கொண்ட அகல்யம் என்ற தங்க ஆபரணத்தை உருவாக்கியதில் தனிஷ்க் பெருமை கொள்கிறது.
அகல்யம் தங்க நகை வரிசையில் உள்ள ஒவ்வொரு ஆபரணமும் ஒளி பொருந்திய தீபத்தின் அழகை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிய கோடுகள், நுட்பமான உள்ளர்த்தங்கள், பாரம்பரிய கோவில் வடிவமைப்பு ஆகிய கலைத்திறனை உள்ளடக்கிய வகையிலும், சமகால அழகியலை அடிப்படையாக கொண்டும் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மண்ணின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவும், அதன் வேர்களாகவும், காலத்திற்கேற்ற புதுமைகளுடன் விளங்கும் தமிழ் பெண்களின் ஆன்மாவையும், அழகையும் கவுரவிக்கும் வகையிலும் அகல்யம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்மையின் சக்தியை போற்றும் ஆடி
தமிழ் மண்ணில் ஆடி மாதம் என்பது பெண்மையின் சக்தியை குறிப்பிடும் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, நீர்வளம், விவசாய வளம், செழிப்பான சூழ்நிலை ஆகியவற்றை
குறிப்பிடும் ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு சடங்குகள், குடும்ப விழாக்கள் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்றன. அவற்றை சிறப்பிக்கும் வகையிலும், குடும்ப வழக்கத்தின்படியும் தங்க நகைகள் பரிசுகளாக வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பரிசாக வழங்குவதில் மையமாக உள்ள தங்க நகைகளின் வரிசையில் தனிஷ்க் வழங்கும் அகல்யம் என்பது இந்த கொண்டாட்டமான தருணத்தில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. அகல்யம் என்பது பெண்களுடைய அழகை அலங்கரிப்பதற்கான ஆபரணமாக மட்டுமல்லாமல் அவர்களது தெய்வீக அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைகிறது.
அகல்யம் தங்க நகை வடிவமைப்பை பொறுத்தவரை அதனுடைய பாரம்பரியம், கலாசார பிரதிபலிப்பு, வளம், உணர்வு ஆகியவற்றை ஒவ்வொரு நகையிலும் வெளிப்படும் விதத்தில் தனிஷ்க் தன்னுடைய அர்ப்பணிப்பை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மங்களகரமான ஒரு நிகழ்ச்சியில் பரிசாக அளிப்பதாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட ஒரு குடும்ப நிகழ்வுக்கு நினைவு பரிசு வழங்குவதாக இருந்தாலும் சரி, கலாசார நிகழ்வின் மரபாக குடும்ப பெண்களுக்கு அணிவிக்கப்படுவதாக இருந்தாலும் சரி, தனிஷ்க் வழங்கும் அகல்யம் ஆபரணங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வின் அர்த்தத்தை ஒளிரச் செய்யும் வகையிலும், அதற்கேற்ற வடிவம் மற்றும் பெயர் ஆகியவற்றை தாங்கி நிற்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மண்ணின் கலாசார திருவிழாக்கள் அடங்கிய இந்த ஆடி மாதத்தில் மங்கையர்களின் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் தெய்வீக ஒளியை மிளிரச்செய்யும் வகையில் அகல்யம் ஆபரணங்களின் அனைத்து வகைகளும் தனிஷ்க் ஷோ-ரூம்களில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த தொகுப்புகளில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து, வாங்கி இந்த ஆடி மாதத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்.