ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் ஆன்லைன் பயிற்சி வகுப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி 50 சதவீத கட்டண சலுகை வழங்கி உள்ளது. பயிற்சியில் சேர செப்டம்பர் 5-ந் தேதி கடைசி நாள்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (தாள்-1 மற்றும் தாள்-2) ஆன்லைன் பயிற்சி ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி முதல் 50 சதவீதம் கட்டண சலுகையுடன் நடைபெற உள்ளதாக ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும். இந்த அகாடமியில் கடந்த ஆண்டுகளில் படித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் வெற்றிபெற்று அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்

2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு (தாள்-1 மற்றும் தாள்-2), ஆன்லைன் வாயிலாக 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் 15.11.2025 அன்று தாள்-1 மற்றும் 16.11.2025 அன்று தாள்-2 நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அல்லது பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆன்லைன் பயிற்சி

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (தாள்-1 மற்றும் தாள்-2), ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 5-ந் தேதி முதல் தேர்வு வரை, தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணியளவில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில், தேவையான பயிற்சித் தொகுப்புகள் இ-புத்தகங்களாக வழங்கப்படும். முக்கிய வினாக்கள் அடங்கிய மாதிரித்தேர்வுகள் கூகுள் படிவத்தின் மூலமாக நடத்தப்படும். தற்போது பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்த கட்டண சலுகை பெற செப்டம்பர் 5-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

முன்பதிவுக்கு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள், ‘TNTET PAPER-I, II ONLINE COACHING-2025@50%OFFER’ என்று டைப் செய்து தங்களது முழு முகவரியுடன் 9176055542 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story