தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் இணைந்து நடத்தும் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி

தமிழகத்தில் 15 முக்கிய நகரங்களில் நடைபெறும் யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்பதிவு செய்து பங்குபெறலாம்.
தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் இணைந்து நாளை (சனிக்கிழமை) சர்வதேச யோகா தினத்தையொட்டி, தமிழகத்தில் 15 முக்கிய நகரங்களில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடத்த இருக்கிறது. இதில், பொதுமக்கள் முன்பதிவு செய்து பங்குபெறலாம்.
இன்றைய வாழ்க்கைக்கு அருமருந்து
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையும், துரித வகை உணவுகளும் மக்களின் மனதையும், உடலையும் சீர்கெட்டுப்போகச் செய்துவிடுகிறது. இதனால், மன அழுத்தம் ஏற்படுவதுடன் பல்வேறு நோய்களுக்கும் ஆளாக வேண்டிய நிலை உருவாகிறது.இதன் விளைவாக, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் அபாயம் நிகழ்கிறது. எனவே, இன்றைய வாழ்க்கை முறைக்கு அருமருந்து எதுவென்று கேட்டால், மனதுக்கும், உடலுக்கும் அமைதி தரும் யோகாதான்.
யோகா தின சிறப்பு நிகழ்ச்சி
இந்த நிலையில், சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி, தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் நாளிதழ்கள் இணைந்து தமிழகத்தில் உள்ள 15 முக்கிய நகரங்களில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறது. டைட்டில் ஸ்பான்சர் ஜி ஸ்கொயர் குழும நிறுவனங்கள், யோகா பார்ட்னர் ஈஷா பவுண்டேசன், ஹெல்த் பார்ட்னர் பி ரைட், ஹாஸ்பிடாலிட்டி பார்ட்னர் அடையார் ஆனந்தபவன், அசோசியேட் ஸ்பான்சர் சத்யா ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தினத்தந்தி டாட் காம், டிடி நெக்ஸ்ட் டாட் காம் இணையதள முகப்பு பக்கங்களில் உள்ள சிறப்பு பகுதியில் நேரடியாக பதிவு செய்துகொள்ளலாம்.
யார் பங்கேற்கலாம்?
சென்னை, கோவை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், தேனி ஆகிய 15 நகரங்களில் 'யோகா வாழ்க்கையை மாற்றும் ஒரு ஆரம்பம்' என்ற தலைப்பில் நாளை காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இதில், 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். பதிவு விவரங்கள் முழுமையாக இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் எளிதாக விண்ணப்பிக்க வசதிக்காக 'கியூ ஆர் கோடு'ம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதை 'ஸ்கேன்' செய்தும் உள்நுழைந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்
முன்பதிவு செய்ய linkல் பார்க்கவும்: https://www.dailythanthi.com/yoga-day-2025