அசுபதி நட்சத்திர மகாபிஷேக வழிபாடு


அசுபதி நட்சத்திர மகாபிஷேக வழிபாடு
x

அசுபதி நட்சத்திர மகாபிஷேக வழிபாடு

தஞ்சாவூர்

கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறை அருகே 69 சாத்தனூர் கிராமத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான திருமூலருக்கு தனி கோவில் உள்ளது.

இக்கோவிலில் பங்குனி மாத அசுபதி நட்சத்திரத்தையொட்டி திருமூலருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.சிவலிங்கம், திருமூலர் வழிபாட்டு குழு நிர்வாகி எம். சந்திரசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

1 More update

Next Story