ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜானிக் சினெர் 2-வது சுற்றில் டிரிஸ்டான் ஸ்கூல்கேட்டை எதிர்கொண்டார்.
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி) 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் டிரிஸ்டான் ஸ்கூல்கேட்டை எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டை இழந்த சினெர் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டார். அதிரடியாக சர்வீசில் மிரட்டிய சினெர் அடுத்த 3 செட்டுகளை தொடர்ச்சியாக கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் சினெர் 4-6, 6-4, 6-1 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் 3-வது சுற்றில் மார்கோஸ் கிரோன் உடன் மோதுகிறார்.
Related Tags :
Next Story