ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
நாளை மறுநாள் நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொள்ள உள்ளார்.
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தாமஸ் மச்சாக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொள்ள உள்ளார்.
Related Tags :
Next Story