மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்


மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 Jan 2025 6:33 AM IST (Updated: 11 Jan 2025 6:34 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

கோலாலம்பூர்,

மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி மலோசியாவின் யெவ் சின் ஓங் - ஈ யி டெயோ இணையை எதிர் கொண்டது.

இந்த ஆட்டத்தில் இரு தரப்பினரும் முதலில் இருந்தே சிறப்பாக விளையாடினர். இறுதியில் இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி இணை 26-24, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி, தென்கொரியாவின் வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர்கொள்கிறது.


Next Story