இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
இந்தியாவின் சாத்விக் - சிராக் செட்டி ஜோடி, சீன தைபேவின் சென் ஸி ரே - லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டது.
ஜகர்தா,
இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் 'இந்தோனேசியா மாஸ்டர்ஸ்' பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்கியது. இதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி, சீன தைபேவின் சென் ஸி ரே - லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சென் ஸி ரே - லின் யூ சீஹ் ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.
Related Tags :
Next Story