இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து போராடி தோல்வி


இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து போராடி தோல்வி
x

image courtesy: AFP

பி.வி.சிந்து காலிறுதியில் மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் கிரேகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.

இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை மரிஸ்கா துன்ஜங் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 62 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 9-21, 21-19, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.


Next Story