ஒலிம்பிக்கில் செஸ் போட்டியை சேர்க்க வேண்டும்- டி.குகேஷ் விருப்பம்


ஒலிம்பிக்கில் செஸ் போட்டியை சேர்க்க வேண்டும்- டி.குகேஷ் விருப்பம்
x

கோப்புப்படம்

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.

புதுடெல்லி,

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் டி.குகேஷ். சமீபத்தில் இவர் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இதையடுத்து அவருக்கு கேல் ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது. விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

தொடர்ந்து அவருக்கு டெல்லியில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது. அப்போது குகேஷ் கூறியதாவது, ஒலிம்பிக்கில் செஸ் போட்டி ஒரு பகுதியாக இருப்பதை காண நான் விரும்புகிறேன். குறிப்பாக இந்தியாவில் ஒலிம்பிக் நடக்கும் பட்சத்தில் செஸ் சேர்க்கப்பட்டால் நன்றாக இருக்கும். செஸ் விளையாட்டு, மிகவும் பிரபலத்தையும் ஆதரவையும் பெற்று வருகிறது என்று நான் நினைக்கிறேன்.

அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதை ஒலிம்பிக் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதனால் ஒலிம்பிக்கில் செஸ் சேர்க்கப்படுவதை உண்மையிலேயே எதிர்நோக்குகிறேன். ஓரிரு நாட்களில் நெதர்லாந்தில் உள்ள விஜ்க் ஆன் ஜீயில் நடைபெறும் டாடா செஸ் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story