ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஜாம்ஷெட்பூர் எப்.சி - மோகன் பகான் ஆட்டம் 'டிரா'
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜார்கண்ட் ,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது.
அதன்படி, ஜார்கண்டில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி - மோகன் பகான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மோகன் பகான் அணி (25வது நிமிடம்) ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி (60வது நிமிடம்) ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
Related Tags :
Next Story